Yen Pidivadhamum Un Thimirum…
என் பிடிவாதமும் , உன் திமிரும்
எனக்கான
பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை… நீ கூறியனுப்பிய தோழியிடம் அறிந்தேன்……!
நீ வார்ததைகளுக்கு தேடி அலைந்ததை…!
எத்தனை முறைபுரிய வைப்பது உனக்கு…!
என்னருகே நீயில்லாமல் வாழ்த்து அட்டை வார்த்தைகளும்
எனக்கு வாதைகள்தான்…என…!
கோபம் பலமுறை
கொண்டதுண்டு…..உன் குறுஞ்செய்தி எதிர்பார்க்கையில்,
வந்து விழும் வங்கிக் கடன்விளம்பரங்களை…!
அது என்ன … தெரிந்தேதான் கொல்கிறாய்…!கடந்து செல்லும் போது
கடைக்கண் பார்வை வீசி…!
நீ முன் நடந்து செல்ல
என் செவிகள் உனைப்பின் தொடரும். அவற்றுக்கு …,
நீ நினைப்பதைக் கேட்டு
எனக்குணர்த்துவதில்…அலாதி இன்பம்…!
உனக்குமறந்திருக்கலாம்…
புடவைக்கடையில் ஒரு சேர , ஒரே நேரத்தில் நாம் தேடியெடுத்த நிறத்தை…!
நம்முள் ஒற்றுமை பல உண்டு,
என் பிடிவாதமும் , உன் திமிரும்சேர்த்து தான்…. !
— பிரநேசம். pranesam@yahoo.com