Ezhathin Vindhu…
“Whenever death may surprise us, let it be welcome if our battle cry has reached even one receptive ear and another hand reaches out to take up our arms.”
— Ernesto Che Guera
ஈழத்தின் விந்து
அன்புச்சகோதரன்
அமரர் முத்துக்குமாருக்கு…. அகவை 27 உனக்கு…ஆனால் 60 ஆண்டுகால சுதந்திர வேட்கையை
ஆறேழு நிமிடங்களில்
அகில உலகிற்குணர்த்திய
அமரருள் அமரன் நீ…!
உன் சமகால வயதில் வாழ்ந்ததற்குப்பெருமைப்படுகிறோம்… என் பிள்ளை..என் மனைவி..என் வீடு..
என்றிங்கு வாழும்..
எதார்த்தவாதிகளுக்குள்ளும்
ஏற்படுத்திவிட்டாய்,உன் தாக்கத்தை….!
ஈழத்தின் சிறு விந்தும்,ஏந்திச்செல்லும் உன் தீரச்செயலை… நீ மூச்சு விடும் பொழுது ,
உன் முகம் தெரியவில்லை…
ஆனால் உன் மூச்சடங்கிய பின்னர்
எல்லோருக்குமானவனாகியிருக்கிறாய்….!
ஆம் எங்களை மாணவர்களாக்கியிருக்கிறாய்….
வாழ்க நின் தீரம்….!
இனி ….!
ஐயா…தமிழ் கூறும் நல்லுலகின் அக்கினிக் குஞ்சுகளே……! போதும் உங்கள் ….
கட் அவுட் பாலாபிஷேகம்…!
போதும் உங்கள் ….நாலாந்தர ரசிகர் மன்றம்…!
போதும் உங்கள் ….கலாசார காபந்து மோகம்…!
துயில் எழுக…பொங்குக… பொங்குக……!
இனியும் பொறுத்திடலாகாது…! தீயினின்று…சிறகுவிரித்த ஃபீனிக்ஸாய்…சிகரம் தொட்ட சோழனாய்…
வேழங்கொண்ட சேரனாய்…
நீதி காத்த பாண்டியனாய்…
ஒவ்வொருவரும் ஏந்துக ஆயுதம்…இனியொரு விதி செய்வோம் …..பின்வாங்குதல் தோற்றலன்று…
அணையும் ஜோதி பிரகாசிப்பது போன்றது இது…!
இடி மின்னல்கள் முழக்கமிடும் இனி…
கடும்புயல் மையம் கொள்ளும் இனி… நீள்துயில் கலைந்தது…!
மீளாத்துயிர் மறையும்
காலம்வெகுதூரம் இல்லை…!
வெல்க ஈழம்…..வாழ்க தமிழீழம்…..!
. — பிரநேசம். pranesam@yahoo.com http://pradeepnesam.tamilblogs.com