பிரதீப்நேசம்

பிரநேச கவிதைகள்…

Eelam…

Posted in Eelam on May 16th, 2009

Dear Friends,

You might have seen the poems written for Tamils In Srilanka. The cruelty of the Lankan Govt. have been brought up to the worlds vision now and still , even after Americas’ and Britians’ repeated compulsions , the war against humanity not yet stopped. Rajapakse Thinks that claim form separate Tamil Eelam will be elilminated if rebels are driven out.
But the thirst for freedom and blood shed for the past 60 years of freedom fight will never come to an end untill and unless Tamil Eelam claim is recognized.
Long Live Eelam…!!!

Pradeep Rajkumar…

Gallery Photo

சாத்தான் ஓதும் வேதங்கள்

Posted in Eelam on April 25th, 2009

We look forward to a world founded upon four essential human freedoms. The first is freedom of speech and expression. The second is freedom of every person to worship God in his own way. The third is freedom from want. The fourth is freedom from fear. - Franklin Delano Roosevelt
Democracy is not an easy form of government, because it is never final; it is a living, changing organism, with a continuous shifting and adjusting of balance between individual freedom and general order. - Ilka Chase

     

Gallery Photo 

Gallery Photo 

சாத்தான் ஓதும் வேதங்கள்

  

காணும் இடமெங்கும்

கரிக்குண்டுகளின் வீச்சுக்கள்…!

கால் தடம் பதிவெங்கும்

 ஷெல்களின் துகள்கள்..! 

வெள்ளவேடு சாமிகளுக்கு

பூஜையோடு

கந்தக வாசனையும்..!

எரியூட்டவும், ஈமம் செய்யவும்

நாதியற்று எரியும்

பிணங்களின் வீச்சங்கள்..!

நெடுஞ்சாலையில்

தனி்த்துக்கிடக்கும் குழந்தையின்

ஒத்தைச் செருப்பைக்

கண்டு பதறிய நெஞ்சம்…. 

இன்று…

பிஞ்சுகள் உயிரற்று

கிடந்தாலும் பதறாமல்

புலம் பெயர்கிறோம்… !

  

எட்டிவிட்டதாம் இறுதிகட்ட சமர்..

நச்சுக்காற்று வீசி பிணம் தின்னும்

கழுதைப்புலிகள்….,

கரும்புலிகளுக்கு ஒப்பாவதில்லை..!

சாத்தான் ஓதும் வேதங்கள்

இன்று சபையேறினாலும்

கரையேறப்போவதில்லை….!

கனவு மட்டுமல்ல..!

ஈழம் எங்களுக்கு…!

இரத்த நாளம்…!

                                                 — பிரநேசம்.

           

Uyirin Yechamum,Uravin Michamum…

Posted in Eelam on April 18th, 2009

“We must carry the war into every corner the enemy happens to carry it, to his home, to his centers of entertainment: a total war. It is necessary to prevent him from having a moment of peace, a quiet moment outside his barracks or even inside; we must attack him wherever he may be, make him feel like a cornered beast wherever he may move. Then his moral fiber shall begin to decline, but we shall notice how the signs of decadence begin to disappear.”

Ernesto Che Guevara, Message to the Tricontinental

உயிரின் எச்சமும்,உறவுகளின் மிச்சமும்… 

உயிரின் அருமை தன் முறை

வரும்வரை உணரப்படுவதில்லை…!

எங்கட ஈழ மக்களின்

 மீளாத்துயர்

சிலருக்கு அரசியல்….!. சிலருக்கு அலட்சியம்…..!சிலருக்கு  பொழுதுபோக்கு…..! 

ஆர்மியின் பார்வையில் ஆறு வயது பாலகனும்

அறுபது வயது பெரியவரும் ஒன்றுதான்

அவர்கள் பயங்கரவாதிகளே…..!

ஆறு மாத கர்ப்பிணிக்கு

அவசர பிரசவம் ஆர்ட்டிலறி புண்ணியத்தில்….!  ங்கட குழந்தைகளும் ஐஸ்பாய்விளையாடும்.

பதுங்கு குழிக்குள் ஒளிந்து….!

க்ளஸ்டர் குண்டு புண்ணியத்தில்

குழந்தையின்சரிந்த குடல்

பறைசாற்றும் பல நாள் பட்டினியை….!  சுதந்திரக் காற்றை சுவாசிக்க மட்டுமின்றி

கந்தக வாசனையை சுவாசிக்கவும்

கற்றுக் கொடுங்கள்…!

பூப்பெய்தும் எங்கள் பெண்களுக்கு

சடங்கு சுற்றுவதில்லை…!

ஆர்மிக்காரனிடம் கற்பிழக்காமல்

தப்பிக்கக் கற்றுக் கொடுங்கள்…!  நாங்கள் இறந்தவர்க்குப்

பிண்டம் வைப்பதில்லை…!

ஆமாம்…எரிகணையால்

பிண்டமாய்ப் போனவர்க்குபிண்டம் எதற்கு..! 

ஐயா எங்களுக்கு பட்டும் வேண்டாம் பகட்டும் வேண்டாம்…!  எங்கள் உயிரின் எச்சமும் உறவுகளின் மிச்சமும் போதும்….!

இல்லையேல்

எங்கள் பிணங்களை தின்று

எங்கள் பெண்களையும் , குழந்தைகளையும்விட்டு விடுங்கள்…!                                                                                                                    — பிரநேசம்.                                                              

Ezhathin Vindhu…

Posted in Eelam on February 7th, 2009

ezhathin-vindhu.pdf

“Whenever death may surprise us, let it be welcome if our battle cry has reached even one receptive ear and another hand reaches out to take up our arms.”

                                                          — Ernesto Che Guera
 

                      ஈழத்தின் விந்து 

அன்புச்சகோதரன்

அமரர் முத்துக்குமாருக்கு…. அகவை 27 உனக்குஆனால் 60 ஆண்டுகால சுதந்திர வேட்கையை

ஆறேழு நிமிடங்களில்

அகில உலகிற்குணர்த்திய

அமரருள் அமரன் நீ…! 

உன் சமகால வயதில் வாழ்ந்ததற்குப்பெருமைப்படுகிறோம்… என் பிள்ளை..என் மனைவி..என் வீடு..

என்றிங்கு வாழும்..

எதார்த்தவாதிகளுக்குள்ளும்

ஏற்படுத்திவிட்டாய்,உன் தாக்கத்தை….! 

ஈழத்தின் சிறு விந்தும்,ஏந்திச்செல்லும் உன் தீரச்செயலை… நீ மூச்சு விடும் பொழுது ,

உன் முகம் தெரியவில்லை…

ஆனால் உன் மூச்சடங்கிய பின்னர்

எல்லோருக்குமானவனாகியிருக்கிறாய்….!

ஆம் எங்களை மாணவர்களாக்கியிருக்கிறாய்….

வாழ்க நின் தீரம்….! 

இனி ….!

ஐயா…தமிழ் கூறும் நல்லுலகின் அக்கினிக் குஞ்சுகளே……! போதும் உங்கள் ….

கட் அவுட் பாலாபிஷேகம்…!

போதும் உங்கள் ….நாலாந்தர ரசிகர் மன்றம்…!

போதும் உங்கள் ….கலாசார காபந்து மோகம்…! 

துயில் எழுக…பொங்குக…  பொங்குக……!

இனியும் பொறுத்திடலாகாது…!  தீயினின்று…சிறகுவிரித்த ஃபீனிக்ஸாய்…சிகரம் தொட்ட சோழனாய்…

வேழங்கொண்ட சேரனாய்…

நீதி காத்த பாண்டியனாய்… 

ஒவ்வொருவரும் ஏந்துக ஆயுதம்…இனியொரு விதி செய்வோம் …..பின்வாங்குதல் தோற்றலன்று…

அணையும் ஜோதி பிரகாசிப்பது போன்றது இது…! 

இடி மின்னல்கள் முழக்கமிடும் இனி…

கடும்புயல் மையம் கொள்ளும் இனி… நீள்துயில் கலைந்தது…!

மீளாத்துயிர் மறையும்

காலம்வெகுதூரம் இல்லை…!

வெல்க ஈழம்…..வாழ்க தமிழீழம்…..! 

. — பிரநேசம்.                                                  pranesam@yahoo.com                                   http://pradeepnesam.tamilblogs.com          

Nicchayathartham…

Posted in Kadhal on February 3rd, 2009

nicchayam.pdf

The Engagement …

The Commitment….!!

Vevvaeru Thisaigalil…

Posted in Kadhal on December 27th, 2008

join alpha-Q group  

வெவ்வேறு திசைகளில்…

நீ எனக்கானவள்இல்லை

எனத்தெரிந்த பின் தான்

உன்மேலான காதல்

மேன்மேலும்உயிர்த்தெழுகிறது…..!!  உனது விடலைத்தன காதலின் ஆழம் புரிந்த பின்தான்

எனதான காதல்

தன்னைத் தானே சோதித்தறிகிறது. …..!! 

உனக்கே தெரியும் நமது சம்பாஷணைகளின் தொடக்கங்களும் முடிவுகளும்

வெவ்வேறு திசைகளிலேயே

பயணித்திருக்கின்றன. …..!! எனக்குத் தோன்றுவதுண்டு ,சில நேரம் …

நமது உரையாடல்கள்

முடிவேயில்லாமல் நீண்டு விட்டாலென்ன… …..!! 

உன் சிலநிமிட காத்திருப்புகள்…

Posted in Kadhal on November 21st, 2008

உன் சிலநிமிட காத்திருப்புகள் 

நீயின்றி நான் கடக்கும்

சோலையில் உணர்ந்தேன்

பாலையின் வெப்பத்தை…!! 

உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,

நாமில்லா சமயங்களில்

பெய்வதில்லை   மழை  !! 

உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை

தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!! 

நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்

எனக்குள் பிரமை… !!! 

காத்திருப்புகளும்,

சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம். 

உனக்கானபூக்கள் வாங்கிய

கடைக்காரன் ஏளனமாய்ப்

பார்க்கிறான் இன்று…

உனது மறுதலிப்பு

அவனுக்குத் தெரிந்திருக்க

வாய்ப்பில்லை…! எனக்கானஉன் சிலநிமிட காத்திருப்புகள்

என்னுள் ஏற்படுத்திய

அதிர்வுகள் பல…!  இன்று நீஎனக்காகக் காத்திருப்பதில்லை…!

இருந்தாலும் ,

நான்தவறவிட்ட

சில நிமிடங்கள் தான்,

எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்

என்பதை நான்உணரவில்லை……!

நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….

நமக்கான ,

நமது காதலைப்புரிந்து கொள்ள….?!!!                                            

                                                           — பிரநேசம்.                                                  pranesam@yahoo.com                                   http://pradeepnesam.tamilblogs.com

Yen Pidivadhamum Un Thimirum…

Posted in Kadhal on November 19th, 2008

yen-pidivadhamum.pdf

என் பிடிவாதமும் , உன் திமிரும் 

எனக்கான

பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை… நீ கூறியனுப்பிய தோழியிடம் அறிந்தேன்……!

நீ வார்ததைகளுக்கு தேடி அலைந்ததை…! 

எத்தனை முறைபுரிய வைப்பது உனக்கு…!

என்னருகே நீயில்லாமல் வாழ்த்து அட்டை வார்த்தைகளும்

எனக்கு வாதைகள்தான்…என…! 

கோபம் பலமுறை

கொண்டதுண்டு…..உன் குறுஞ்செய்தி எதிர்பார்க்கையில்,

வந்து விழும் வங்கிக் கடன்விளம்பரங்களை…! 

அது என்ன … தெரிந்தேதான் கொல்கிறாய்…!கடந்து செல்லும் போது

கடைக்கண் பார்வை வீசி…! 

நீ முன் நடந்து செல்ல

என் செவிகள் உனைப்பின் தொடரும். அவற்றுக்கு …,

நீ நினைப்பதைக் கேட்டு

எனக்குணர்த்துவதில்…அலாதி இன்பம்…! 

உனக்குமறந்திருக்கலாம்…

புடவைக்கடையில் ஒரு சேர , ஒரே நேரத்தில் நாம் தேடியெடுத்த நிறத்தை…! 

நம்முள் ஒற்றுமை பல உண்டு,

என் பிடிவாதமும் , உன் திமிரும்சேர்த்து தான்…. !    

                                               — பிரநேசம்.                                                  pranesam@yahoo.com

 

Aadhiyil Apple…

Posted in Kadhal on November 15th, 2008

ஆதியில் ஆப்பிள்…. 

காது மடல் நுனி

கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !

கால்கள் பின்னி

ஊர்ந்த கைகளுக்கிடையே

சிக்கித்தவித்தது வெட்கம்… ! 

படர்கையில் பாதிதேகம்

நிலைக்கண்ணாடியில்…,

தோன்றி விலக,

மறைந்து சிரித்தது வெட்கம்…! 

 பின்னிரவுப்பறவையொன்று

ஜன்னல் வழிபார்த்து

சீட்டியடித்தது….. ! 

மயக்கம் பாதி, தயக்கம் மீதி…

முடிவில் முதலாவது ஜெயிக்க,

தயக்கமும், வெட்கமும்…

கட்டில் நுனியில்… ! 

தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து, 

பின்..ஒவ்வொன்றாய் பிரிய…

வியர்வைத்துளியில்,

கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. ! 

புரியாத புதிராய்புதிதாய்த்

தொடங்கத் தொடங்க,புரியாதவை

புலப்படலாயின…! 

இருபது வருடங்களாய்

பூட்டிவைத்தபொக்கிஷங்கள்

கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,

மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,

உண்டாயின…. ! 

மூச்சூக்காற்றும் வெப்பமாக,

வியர்வையில் தேகம் தெப்பமாக…!

களைத்து விலகும் போது

காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !

வாழ்க…… !

ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. ! 

                                                  பிரநேசம்.                                                  pranesam@yahoo.com

Tharai Vazhi Payanam…

Posted in Kadhal on October 11th, 2008

tharaivazhi-payanam.pdf

Can you compare Travel with Love ….!!

Have you ever noticed a lost butterfly inside a moving bus….!!

Have you ever felt that feeling of being lost in an unknown , unmanned locality…..?

Pranesam…!!!