பிரதீப்நேசம்

பிரநேச கவிதைகள்…

Quotes On Freedom Fight

Posted in Uncategorized on February 27th, 2010

“I began revolution with 82 men. If I had to do it again, I do it with 10 or 15 and absolute faith. It does not matter how small you are if you have faith and plan of action.”

 

 - Fidel Castro.

 

Better to die standing, than to live on your knees.”

- Ernesto ‘Che’ Guevara

 

“The revolution is not an apple that falls when it is ripe. You have to make it fall.”

 

 - Ernesto ‘Che’ Guevara

 

“I don’t know if the Cuban revolution will survive or not. It’s difficult to say. But [if it doesn’t] . . . don’t come looking for me among the refugees in the embassies. I’ve had that experience, and I’m not ever going to repeat it. I will go out with a machine gun in my hand, to the barricades. . . I’ll keep fighting to the end.”

 

 - Ernesto ‘Che’ Guevara

Quotes on Freedom

Posted in Uncategorized on February 27th, 2010

John F. Kennedy: Quotes on Freedom
Let every nation know, whether it wishes us well or ill, that we shall pay any price, bear any burden, meet any hardship, support any friend, oppose any foe to assure the survival and success of liberty.George Bernard Shaw: Quotes on Freedom
Liberty means responsibility. That is why most men dread it.

Kahlil Gibran: Quotes on Freedom
Life without liberty is like a body without spirit.

 Stephen Covey: Quotes on Freedom
Our ultimate freedom is the right and power to decide how anybody or anything outside ourselves will affect us.

Posted in Kadhal on February 16th, 2010

மலரத் துடிக்கும் மொட்டு
நீ பூவாசம் நுகரும் போது
உன் சுவாசப் பையுள் சென்று
வெளியேற விரும்புவதில்லை CO2
உன் சேலை கால் மடிப்பில்
தவமிருக்க வேண்டும் மனம்…
சில நேரம் நீ கொலுசோடு நடக்கையில்
பதறித் துடிக்கும் தினம்…

மாற்றங்கள்…

Posted in Eelam on February 8th, 2010

Gallery Photo 

மாற்றங்கள் 

கிளிநொச்சி இன்று கிரானிக்கா….!! 

முல்லைத்தீவு இன்று மூலத்தூவ…!! 

சொந்த நாட்டுமக்கள் இன்று  

தம் சொந்தமண்அகதி முகாம்களில்….!!   

தனி ஈழ மண்ணைக் காணாமல்

மண்ணில் மாய்ந்த தளபதிகள்…!!

தலைபிளந்து செத்தான் தலைவன்.. !!

பதில் தராத டி.என்.ஏ…!!

பொட்டு பற்றி பேச 

நினைக்கும் வாய்க்குப் பூட்டு….!!   

இப்படி 2 ஆண்டுகளில்

ஏகப்பட்டமாற்றங்கள், கூற்றுகள்…!! 

அஞ்ஞாதவாசம் பூண்டிருக்கும்  

ஈழ உணர்வு அற்றுப் போகவில்லை…!! 

அரசியல்,இராணுவ பின்னடைவுகள்

விடுதலையுணர்வை

வேரற்றுப்போகச்செய்வதில்லை..!! 

சுதந்திரம் வெறும் உணர்வல்ல…!!

அது ஒரு யாகம்..!! 

ஓயாத அலைகள் ஆர்ப்பரித்து எழும்.

பேரினவாதத்தின் ஊழிக்காலம்

வெகுதொலைவில்இல்லை….!!    

                                                                                                                                                                                                                                     —   பிரநேசம்.                                                                                    

 http://pradeepnesam.tamilblogs.com

பெயரிடாத்தமிழ்

Posted in Kadhal on February 1st, 2010

                                                        


 

பெயரிடாத்தமிழ் 

பின்னொரு நாளில்

பிறக்கப் போகும்

குழந்தைக்குப்பெயரிட்டேன் “யாழிசை” என்று…

பெற்றவள் சொன்னாள்…பெண்தானென்று…

பெறப்போகிறவள் சொல்கிறாள் ஆண் என்று…

பால் என்னவென்று அறிய

அரசாங்கத் தடை இருப்பினும்

பால் வாடை

நுகரபெறப்போகிறவன் தவமிருக்கிறேன்….!!

பால் எதுவாயிருப்பினும்,

பால் வாசமும், எச்சிலுடை வீச்சமும்,

என் தமிழ் பெருமையைச் சொல்லும்…!!

எந்நாட்டின் கீழ் இருந்தாலும்,

தெள்ளு தமிழ் பேசி என் வாரிசு

என் தமிழ் சொல்லும்…!!      

                                                                                        - பிரநேசம் 

கைம்பெண்

Posted in Hikoo on September 26th, 2009

  சிகரெட் புகை   சூழ்ந்த

பெட்டிக் கடை 

பொதுத்தொலைபேசியில்  யாரிடமோ

வெகுநேரம்   பேசிக்கொண்டிருக்கிறாள் 

  ஒரு கைம்பெண். !!

 

முரண்…

Posted in Hikoo on September 26th, 2009

சாலையில் கிடக்கும் 

குழந்தையின் ஒற்றைச்செருப்பு 

யாருக்குச்சொந்தம்…. 

ஆண்குழந்தையா…பெண்குழந்தையா… !!

நிச்சயதார்த்தம்…

Posted in Kadhal on September 12th, 2009

 

நிச்சயதார்த்தம்…

எனைப்பிடிக்கிறதா….

உனைப்பிடிக்கிறதா…

என சம்பிரதாய விசாரிப்புக்குப்

பின்தான்நமது பிற்கால

உறவுக்கான நிச்சயம் நிர்ணயிக்கப்படுகிறது….!

எனினும் அதே வார்த்தைகளில்

தொடங்குகிறது

நமது வாழ்க்கைக்கான

பிடிப்பும் அச்சாரமும்…!

அதே கேள்விகளின்

அடர்த்திகளில் தான்

நம்மை நாம் உணர்ந்து கொள்ள

சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படுகின்றன…! 

உனைக் கோவிலில் கண்ட

கணம் நினைவிலில்லை…! 
 
தரகர் கேட்கும் பொழுதும் 

சொல்லத் தோன்றவில்லை…

ஒரு மாத இடைவேளையில்

நடந்த நிச்சயதார்த்தத்தில் தான்

நமது முகங்கள் நமக்கு பரிச்சயம் ஆகின்றன…!

ஆனால் அன்றே உணர்ந்தேன்…

நம் சம்பிரதாயங்களின் வலிமையை…!

ஆம் …நீ எனக்கானவள் …

என்ற நிச்சயத்தை என்னை

உணரச் செய்தவை அவை.

அறிவுறுத்தப்பட்டேன் நண்பர்களால்

மென்பொருள் பெண்கள்

மென்மையானவர்களல்லவென்று….!

பயம் தெளிந்த பின்னர் அறிந்தேன்…

நீயே ஒரு மென்பொருள் என்று…! 

இன்னும் நாம் போக வேண்டிய

தூரம்  பல இருப்பினும் 

களைப்பும் மலைப்பும் தோன்றவில்லை…..!

நமக்கான நமது சொந்தங்கள்

அதிகரிக்கும்போது….

இனியும் ஒரு மாதம்…இருக்கிறது……

நம் திருமணத்திற்கு ,

நாம் நமது அருகாமையை

இருவரும் எதிர் நோக்கியிருக்கிறோம்….!

— பிரநேசம்.                                                

         pranesam@yahoo.com                             

சில மாற்றங்களும்,பல கூற்றுகளும்…

Posted in Eelam on July 18th, 2009

வன்னிக்காட்டு வீரம் வரையறைக்குட்பட்டதல்ல…

மகிந்தரின் வெற்றி சுயநல பொருளாதார கொள்கை கொண்ட

மேற்கத்தியத்திற்குக் கிடைத்த வெற்றியே அன்றி..,

வீரத்திற்கு அல்ல…

வாழ்க தமிழ்…

Posted in Eelam on June 6th, 2009

konjam-eeram.pdf

அன்புத் தமிழர்க்கு,

மறதியும்,அலட்சியமும் தமிழன் கூடப்பிறந்தவை…

தன் கூரை பற்றி எரியும் வரை ,

உறக்கத்திலிருந்து விழிப்பதில்லை…

பிரதீப் ராஜ்குமார்….